×

பிரிட்டனை விட கூடுதல் வீரியம் மிக்க மேலும் ஒரு கொடிய கொரோனா வைரஸ் வகை தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிப்பு : அச்சத்தில் உலக நாடுகள்!!

லண்டன் : பிரிட்டனில் அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸை காட்டிலும் வீரியம் மிக்க மேலும் ஒரு கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரிட்டன் சென்ற 2 பேருக்கு நடத்திய பரிசோதனையில், கொரோனா வைரஸின் மாறுபட்ட புதிய வடிவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பிரிட்டனில் ஏற்கனவே பரவி உள்ள கொரோனா வைரஸை காட்டிலும் அதிக வீரியம் கொண்டது. இது 70%-த்திற்கும் அதிகமான வேகத்தில் பரவக்கூடியது என்பதால் மிகுந்த கவலை அளிப்பதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேத் ஹன்காக்  கூறியுள்ளார்.

மேலும் தென் ஆப்ரிக்காவில் இந்த வைரஸ் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் மேத் ஹன்காக் தெரிவித்துள்ளார். இந்த புதிய வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பிரித்தானியாவில் ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக தென் ஆப்பிரிக்காவிற்கு இங்கிலாந்து மக்கள் செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவருக்கு கட்டாய தனிமையும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : nations ,Britain ,South Africa ,world , UK, Corona virus, South Africa, discovery
× RELATED உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்...