×

ஆந்திர மாநிலத்தில் இளம்பெண் கொல்லப்பட்டு தீவைத்து எரிப்பு.: தன்னை ஏமாற்றியதால் கொன்றதாக முன்னாள் காதலன் வாக்குமூலம்

அனந்தப்பூர்: ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே எஸ்பிஐ வங்கியில் பணியாற்றிய இளம்பெண்ணை அவரது முன்னாள் காதலன் கொலை செய்து தீவைத்து எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலித்த தன்னைவிட்டு விட்டு வேறு ஒரு நபருடன் பழகியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக காவல்துறை நடத்திய விசாரணையில் முன்னாள் காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் சினேகலதா. 19 வயதான சினேகலதா அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கொத்தனார் வேலை செய்து வரும் ராஜேஷ் உடன் சினேகலதா ஓர் ஆண்டுக்குமேல் பழகிவந்துள்ளார்.

இந்தநிலையில் தர்மாவரத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியல் ஒப்பந்த ஊழியராக கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வேலை கிடைத்துள்ளது. அப்போதில் இருந்து ராஜேஷ்யிடம் பழகுவதை சினேகலதா குறைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய சினேகலதா, நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

பல இடங்களில் சினேகலதாவை தேடி பார்த்துவிட்டு வேறு வழியின்றி பெற்றோர்கள் தர்மாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் தர்மாவரம் சாலையோரம் முட்புதருக்கு அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு உள்ள தடையங்களை ஆதாரமாக கொண்டு விசாரணை செய்ததில் அது காணாமல் போன சினேகலதா என்பது தெரியவந்தது. உடனே சினேகலதாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது சினேகலதாவின் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில் கடந்த ஆண்டில் மட்டும் 1618 முறை ராஜேஷியிடம் பேசி இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ராஜேஷாயை பிடித்து காவல்துறை நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. தன்னை காதலித்து வந்த சினேகலதா திடீரென தன்னுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டு வேறு ஒரு நபருடன் பழகுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் சினேகலதாவை தனியாக அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தடையங்களை அழிக்க தீவைத்து கொழித்தியதாக கூறியுள்ளார்.


Tags : Ex-boyfriend ,teen ,Andhra Pradesh , Andhra Pradesh ex-boyfriend confesses to killing teenager
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...