×

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு..!

அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தற்போது மொத்தம் 8 அணிகள் உள்ள நிலையில் மேலும், வருகின்ற 2022ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ளூர் போட்டியான ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது 2022ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமம், மற்றும் சஞ்சீவ் கோயங்கா (ரைஸிங் புனே சூப்பர் ஜெயிட்ன்ஸ்) குழுமத்தினர் இரு புதிய அணிகளுக்கு ஆர்வமாக இருக்கின்றனர். இரு அணிகளுமே அகமதாபாத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சர்வதேச அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால்,

மேலும், அடுத்த ஆண்டே அனுமதியளித்தால், அவசர, அவசரமாக ஏலத்தை நடத்த வேண்டும், வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதால், 2022ம் ஆண்டிலிருந்து 10 அணிகளை சேர்ப்பது குறித்து பேசப்படுகிறது. 2022-ம் ஆண்டில் 10 அணிகள் பங்கேற்றால் 94 போட்டிகள் நடக்கும். ரஞ்சிக் கோப்பை உள்ளிட்ட உள்ளுர்ப் போட்டிகளில் நடத்தப்படாததால் வீரர்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்போது இருக்கும் சட்டங்களின்படி ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு வரிவிலக்கு அளிக்க இடமில்லை. இதுகுறித்து பிசிசிஐ பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : BCCI ,teams ,IPL , Tamils, Volunteers, DMK, MK Stalin, Letter
× RELATED ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்: பிசிசிஐ தகவல்