முட்டை கொள்முதல் விலை ரூ.5-ஐ தாண்டியது.: ஒரே நாளில் முட்டை ஒன்றுக்கு 20 காசுகள் உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.5.10 பைசாவாக உயர்ந்துள்ளது. முட்டை ஒன்றின் நேற்றைய பண்ணை கொள்முதல் விலை ரூ.4.90-ஆகா இருந்தது. இன்று முட்டை ஒன்றுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.5.10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக முட்டையின் நுகர்வும், விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் நாமக்கல் பகுதியில் இருந்து நாள்தோறும் 50 லட்சம் முட்டைகள் வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பிற மண்டலங்களிலும் முட்டை விலை தொடர்ந்து வருகிறது. இதுவே முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் முட்டை பண்ணையாளர்கள்.

Related Stories:

>