எம்.ஜி.ஆர் வாழ்வே ஒரு பத்தாண்டுத் திட்டம் : கவிஞர் வைரமுத்து நினைவஞ்சலி

சென்னை : அதிமுகவின் நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 33-வது நினைவு தினம் இன்று (டிச. 24) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர். மேலும், எம்ஜிஆர் நினைவு தின உறுதிமொழியையும் ஏற்றனர்.அதேபோன்று, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் எம்ஜிஆரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து எம்ஜிஆரை நினைவுகூர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

எம்.ஜி.ஆர்

1917 – பிறக்கிறார்

1927 – நாடகம் நடிக்கிறார்

1937 – திரையுலகில் அறியப்படுகிறார்

1947 – கதாநாயகனாகிறார்

1957 – நாடோடி மன்னன் தயாரிக்கிறார்

1967 – சட்டமன்ற உறுப்பினர்

1977 – முதலமைச்சர்

1987 – வாழ்வு நிறைகிறார்

எம்.ஜி.ஆர் வாழ்வே

ஒரு பத்தாண்டுத் திட்டம் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>