×

அறிவிப்புகளை வாபஸ் பெரும் தமிழக அமைச்சர்கள்... அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா என மு.க.ஸ்டாலின் விமர்சனம்!!

சென்னை : குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்த வைக்கப்பட்டது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் தினசரி 5 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது . இந்த சூழலில் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜனவரி 1ம் தேதி முதல் வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  சென்னையில் குப்பைக்கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அதே போல தமிழக மின்சார வாரியத்தில் உள்ள துணை மின்நிலையத்தையும், பணியிடங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்த உத்தரவை வாபஸ் பெறுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.

இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

மின் வாரியப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் திரு. தங்கமணி!

குப்பை கொட்டவும் வரி என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி வந்து செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி!

அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா?

‘எண்ணித்துணிக கருமம்’ என அ.தி.மு.க. அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!, எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,ministers ,MK Stalin , MK Stalin, Review
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...