பாட்டவயல் பகுதியில் காட்டு யானைகளை கண்காணிக்க வனத்துறையினருக்கு தங்கும் அறை

பந்தலூர்: பிதர்காடு வனச்சரகம் பாட்டவயல் பகுதி அருகில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரள மாநில முத்தங்கா புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. கடந்த வருடம் இப்பகுதியில் நாராயணன் என்பவர் காட்டு யானை தாக்கி காயமடைந்தார்.

பாட்டவயல் பகுதியில் வனவிலங்கு மோதலை தவிர்க்கும் விதமாக மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்து வனப் பணியாளர்கள் தங்கி யானை நடமாட்டம் குறித்து கண்காணிப்பதற்காக தங்கும் அறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் சமையல் அறை, குளியல் அறையுடன் கூடிய கழிப்பறை அமைக்க மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் மேற்பார்வையில் கட்டுமான பணிகள் முடிவடைந்து தற்போது சுழற்சி முறையில் வன பணியாளர் மற்றும் 4 வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு யானை நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories:

>