×

சுடுகாட்டிற்கு செல்ல பாதையில்லை: ஓடையில் இறங்கி சடலத்தை எடுத்து செல்லும் அவலம்

சோளிங்கர்: சோளிங்கர் அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாதையில்லாததால் ஓடையில் இறங்கி சடலத்தை எடுத்து செல்லும் அவலம் உள்ளது. அதிகாரிகள் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோளிங்கர் ஒன்றியம் நந்திமங்கலம் கிராமப்பகுதியில் இறந்தவர்களின் சடலங்களை சுடுகாட்டிற்கு சென்று அடக்கம் செய்ய நந்தி மங்கலம் ஏரி ஓடையை கடந்து செல்ல வேண்டும்.

இந்த நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையால் சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. அதன்படி, நந்திமங்கலம் ஏரி ஓடையில் முழங்கால் அளவுக்கு தற்போது தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், நந்தி மங்கலம் கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் நேற்று காலமானார். அவரது சடலத்தை அவரது உறவினர்கள் அடக்கம் செய்ய நந்தி மங்கலம் ஏரி ஓடையில் ஓடும் முழங்கால் அளவு தண்ணீரில் அவரது உறவினர் சிரமத்துடன் எடுத்து சென்றனர்.

மழைக்காலங்களில் சுடுகாட்டிற்கு செல்ல ஓடை தண்ணீரில் இறங்கி சடலத்தை சிரமத்துடன் கொண்டு செல்லும் அவலநிலை தொடர்கிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் தரைப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : crematorium ,stream , Sholingar, Grave path
× RELATED விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்