இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் : முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை : கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தி

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                அன்பின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த நன்னாளான கிறிஸ்துமஸ் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கிறேன்.

இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய நெறிகளை மக்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றி, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் வாழ்ந்தால், உலகம் அமைதிப் பூங்காவாக பூத்துக் குலுங்கும்.   

மாண்புமிகு அம்மாவின் அரசு, கிறிஸ்துவ மக்களின் நல்வாழ்விற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் சிறப்பு திட்டம், தமிழ்நாட்டிலுள்ள கிறித்துவ மதத்தைச் சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள, ஆதரவற்ற விதவைகள், வயதான பெண்கள் நலனுக்காக கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் நிதியுதவி வழங்குதல் மற்றும் தையல், பூ-வேலைபாடுகள், காலணிகள், கைவினை பொருட்கள் செய்வதற்கான பயிற்சிகள் வழங்குதல், கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகளுக்காக அரசின் மானிய உதவி வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.  

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: