ஜார்க்கண்ட் விவசாயிகளின் ரூ.2 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி.: முதலமைச்சர் சோரன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.2 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் சோரன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி  ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 9,07,000 விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிலம் கையகம்படுத்தும் சட்டத்திலும் திருத்தம் அமைச்சரவை வழங்கியுள்ளது.  

 ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு ரேஷன் அரிசி வழங்கும் பணிக்காக ஒப்பந்தமும் இனி தகுதியான அனுபவமிக்க உற்பத்தியாளர்களுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வருகின்ற 29-ம் தேதி முதலமைச்சர் சோரன் தலைமையிலான அரசுக்கு ஓராண்டு நிறைவு பெறுகிறது. அன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இன்றும் வெளியாகும் என்று அம்மாநில வேளாண்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள 38,432 அங்கன்வாடி மையங்கள் மற்றும் வீடுகளுக்கு மத்திய ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பட்டு திட்டத்தின் கீழ் தனியார் உற்பத்தியாளர்கள் நேரடியாக அரிசி விநியோகம் செய்ய உள்ளனர். 

Related Stories:

>