×

5 திரைப்பட ஊடக பிரிவுகளை ஒன்றாக இணைக்க ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை..!!

டெல்லி: திரைப்பட பிரிவு, திரைப்பட திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்பட காப்பகம், இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டில் ஆண்டிற்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால் உலகளவில் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நாடாக இந்தியா திகழ்கிறது. சினிமாத்துறை, தனியர்த்துறையினால் வழிநடத்தப்பட்டு வரும் நிலையில், திரைப்பட பிரிவு, திரைப்பட திருவிழா இயக்குனரகம், இந்தியாவின் தேசிய திரைப்பட காப்பகம், இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் இணைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

இந்த இணைப்பின் மூலம் திரைப்பட ஊடக பிரிவுகள் அனைத்தும் ஒரு நிறுவனந்தின் தலைமையில் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து திறம்பட மேற்கொள்ளும். மேலும் இந்த இணைப்புக்கு உதவ பரிவர்த்தனை ஆலோசகர் மற்றும் சட்ட ஆலோசகர் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சினிமா ஊடக நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் ஊழியர்களை மாற்றுவது இணைப்பின் அனைத்து செயல்பாட்டு அம்சங்களையும் மேற்பார்வையிடுவது போன்றவற்றை பரிவர்த்தனை ஆலோசகரும், சட்ட ஆலோசகரும் வழங்குவர். இந்த இணைப்பின் போது, சம்பந்தப்பட்ட ஊடக நிறுவன ஊழியர்கள் நலன்கள் முழுவதும் பாதுகாக்கப்படும். எந்த ஊழியரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.

Tags : Union Cabinet , 5 Film Media Division, Union Cabinet, Approval
× RELATED அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி...