×

மிரட்டும் கொரோனா..!! உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 7.90 கோடியை தாண்டியது: 17.36 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17.36 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,736,135 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 79,003,751 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 55,599,815 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,511 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்தசூழலில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அங்கு மேலும் ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 7,90,26,579 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,56,04,265 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,16,85,779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,547 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Tags : victims ,fatalities , Intimidating corona .. !! Worldwide, the number of victims has crossed 7.90 crore: 17.36 lakh fatalities
× RELATED அரியலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி