×

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர், எஸ்பி ஆய்வு

செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 1425 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2 கனரக வாகனங்கள் மூலம் பலத்த பாதுகாப்போடு கொண்டு வந்து, மறைமலைநகர் நகராட்சி வளாகத்தில் இறக்கப்பட்டுள்ளன.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் ஜான்லூயிஸ், எஸ்பி கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் அவைகள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறைகளையும் பார்வையிட்டனர். அங்கு, 14 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags : Chengalpattu , Chengalpattu District Voting Machines Collector, SP Inspection
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்