×

நகைக்கடை உரிமையாளர், ஊழியரை தாக்கி 300 சவரன் கொள்ளையடித்த 5 பேர் கைது

ஸ்ரீபெரும்பதூர்: திருவள்ளூரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் அசிஸ் (20). அதே பகுதியில் கீதாஞ்சலி ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்துகின்றனர். இந்த கடையில் ராஜ்குமார் (50) என்பவர் ஊழியராக வேலை செய்கிறார். இங்கிருந்து நகைகளை பல பகுதிகளில் உள்ள கடைகளுக்கு நகைகள் சப்ளை செய்யப்படுகிறது.
கடந்த 10ம் ேததி ஆசிஸ், ஊழியர் ராஜ்குமார் ஆகியோர் நகைகளை சப்ளை செய்ய ஆட்டோவில் புறப்பட்டனர்.

கடைசியாக ஸ்ரீபெரும்பத்தூருக்கு 300 சவரன் நகைகளுடன் சென்று கொண்டிருந்தனர். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மாம்பாக்கம் அருகே சென்றபோது, 3 பைக்கிள் வந்த 7 பேர், அவர்களை மறித்து, நகைகளை பறித்து கொண்டு தப்பினர். இதுதொடர்பாக, ஸ்ரீபெரும்பதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூடுவாஞ்சேரி அடுத்த ஓட்டேரியை சேர்ந்த ஒருவரை பிடித்து, விசாரித்தனர்.

அதில், மேற்கண்ட நகைக்கடையில் வேலை செய்த சந்தோஷ் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றுவிட்டார். அவர், வேலை செய்தபோது, நகைகள் சப்ளை செய்வது குறித்து நன்கு தெரிந்து இருந்தார்.
பெரும்பதூர் அருகே ஏகனாபுரம், ராமானுஜபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 போலீஸ்காரர்களுடன், சந்தோஷுக்கு நட்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள், கீதாஞ்சலி நகை கடையில் இருந்து மற்ற கடைகளுக்கு சப்ளை செய்யும்போது கொள்ளையடிக்க திட்டம் திட்டினர்.

இதையொட்டி, கீதாஞ்சலி நகைக்கடையில் இருந்து எந்த நேரத்தில் நகைகள் கொண்டு செல்லப்படுகிறது என தகவல் கொடுக்கும்படி, அதே கடையில் வேலை செய்யும் தனது நண்பனிடம் தகவல் கொடுக்கும்படி சந்தோஷ் உதவி கேட்டார். அதன்படி, கடந்த 10ம் தேதி, ஓட்டேரியை சேர்ந்த 7 பேரை, சந்தோஷின் போலீஸ் நண்பர்கள் நகை கொள்ளையடிக்க தயார் செய்தனர். பின்னர், நகை சப்ளை செய்வதை கண்காணித்து, 300 சவரன் நகைகளை கொள்ளையடித்தனர்.

பின்னர் நகைகளை, கோயம்புத்தூரில் விற்பனை செய்தது என தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின் 2 போலீஸ்காரர்கள், சந்தோஷ், கொள்ளைக்கு தகவல் கொடுத்த நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.



Tags : Jewelry store owner , Jewelry store owner arrested for robbing 300 employees
× RELATED கவரிங் கடை பெண்ணை தாக்கிய நகை கடை உரிமையாளருக்கு வலை