×

சைதாப்பேட்டையில் அரசு ஊழியர்களுக்கு குடியிருப்பு கட்ட ரூ.89 கோடி நிதி ஒதுக்கீடு: அரசு உத்தரவு

சென்னை: சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு ஊழியர்களுக்காக 19 தளங்கள் கொண்ட 190 குடியிருப்புகள் கட்ட ரூ.89 கோடி நிதி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு குடியிருப்புகளில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், தாடண்டர் நகரில் பழைய டி பிரிவு குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்ததால், அந்த குடியிருப்புகளில் வசித்த ஊழியர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள சி பிரிவு குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டனர்.

இதுதொடர்பாக சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 74 ஏக்கர் பரப்பளவில் புதிதாக குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்பேரில், தாடண்டர் நகரில் தரைதளத்துடன் கூடிய 19 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், ஒவ்வொரு தளத்தில் 10 வீடுகள் வீதம் 190 வீடுகள் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில், தற்போது இக்குடியிருப்பு கட்ட ரூ.88..49 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

Tags : government employees ,Saidapet , Rs 89 crore allocated for construction of housing for government employees in Saidapet: Government order
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்