திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் துணை ஆணையர் (ெபாறுப்பு) ஜெயப்பிரியா வெளியிட்டுள்ள அறிக்கை:

* நாளை வைகுண்ட ஏகாதசி விழா காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை இணையதளம் மூலமாக இலவச முன்பதிவு செய்த 3000 பேர் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் வழியாக குளத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள க்யூ வரிசையில் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

* மேற்கு கோபுர வாசல் வழியாக காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை தெற்கு மாடவீதி வழியாக அமைக்கப்பட்டுள்ள க்யூ வரிசையில் ரூ.100 காணிக்கை கட்டணச் சீட்டு அனுமதிக்கப்படும்.

* மேற்கு கோபுர வாசல், பேயாழ்வார் கோயில் தெரு வழியாக அமைக்கப்பட்டுள்ள க்யூ வரிசையில், பரமபத வாசல் மட்டும் தரிசனம் செய்ய காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

* கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதயநோய்போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் அனுமதிக்கப்படமாட்டார்.

Related Stories:

>