×

நகராட்சி நிர்வாக ஆணையரக தலைமை பொறியாளர் புகழேந்தி நியமனம் ரத்து: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரக தலைமை பொறியாளர் புகழேந்தி நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை மாநகராட்சியின், முதன்மை தலைமை பொறியாளராக இருந்தவர் புகழேந்தி. இவரது பணிக்காலம் முடிந்த நிலையில், இரண்டாண்டு பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு கடந்த ஜூன் 30ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் முதன்மை தலைமை பொறியாளராக புகழேந்தி   நியமிக்கப்பட்டார். நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளராக இருந்த நடராசன் சென்னை மாநகராட்சி முதன்மை தலைமை பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இதை எதிர்த்து நடராசன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், \” நகராட்சி நிர்வாகத் துறையின் தலைமைப் பொறியாளராக புகழேந்தி நியமனம் செய்தது ரத்து செய்யப்படுகிறது. அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோத பணி நீடிப்பு வழங்க முடியாது. நகராட்சி நிர்வாக துறையின் தலைமை பொறியாளர் பதவிக்கான தகுதி புகழேந்திக்கு இல்லை. முக்கிய தலைமை பதவியில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும்போதும் தகுதியானவர்கள் இல்லாதபோதும் அரசு இதுபோன்ற பணி நீட்டிப்பில் உள்ளவர்களை நியமிக்கலாம். ஆனால் புகழேந்தி நியமனம் அசாதாரண சலுகையாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திறமையான சீனியர் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு கேள்வி எழுந்துள்ளது. எனவே, விதிக்கு முரணாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் நடராசனுக்கு மீண்டும் நகராட்சி நிர்வாகத் துறையின் தலைமைப் பொறியாளர் பணியை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chief Engineer ,Municipal Executive Commission ,Pukahendi , Appointment of Chief Engineer, Municipal Executive Commission, Pukahendi canceled: Chennai iCourt Action Order
× RELATED பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் திறப்பு