பூந்தமல்லி சிறையில் வெளிநாட்டு கைதி மர்ம சாவு

சென்னை: தர்மபுரி பகுதியில் கடந்த டிச.5ம் தேதி போலீசார் ரோந்து சென்ற போது தனியாக சுற்றித் திரிந்த வெளிநாட்டுக்காரரை பிடித்தனர். விசாரணையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டேவிட் ஆண்டனி (68) என்பதும், உரிய ஆவணங்களின்றி நீண்டநாட்களாக தமிழகத்தில் இருப்பதும் தெரியவந்தது. அவரை தர்மபுரி போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட டேவிட் ஆண்டனி நேற்று திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

அவரை சிறை வார்டன் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், டேவிட் ஆண்டனி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறை நிர்வாகம் தரப்பில் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் டேவிட் ஆண்டனி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Related Stories:

>