×

ஒரே அணிக்காக அதிக கோல் பீலேவை முந்தினார் மெஸ்ஸி

மாட்ரிட்: ஒரே கால்பந்து கிளப் அணிக்காக அதிக கோல் அடித்த பிரேசில் வீரர் பீலேவின் சாதனையை பார்சிலோனா அணியின் லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டீனா) முறியடித்தார். அர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி (33). கடந்த 2004ம் ஆண்டு முதல் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப்பான பார்சிலோனாவுக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

லாலிகா தொடரில் நேற்று பார்சிலோனா - ரியல் வல்லடோலிட் அணிகள் மோதின. அந்த போட்டியில் பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. கிளமென்ட் லெங்லெட் 21வது நிமிடத்திலும், மார்ட்டின் பிரெய்த்வெய்ட் 35வது நிமிடத்திலும் கோலடித்தனர். 65வது நிமிடத்தில் அணியின் இளம் வீரர் பெட்ரோ கோன்சாலெஸ் (18) பாஸ் செய்த பந்தை மெஸ்ஸி அழகாக கோலாக்கினார்.

இது பார்சிலோனா அணிக்காக அவர் அடிக்கும் 644வது கோலாகும் (749 போட்டி). அதன் மூலம் பீலேவின் சாதனையை மெஸ்ஸி முறியடித்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மெஸ்ஸி, ‘நான் விளையாடத் தொடங்கியபோது, எந்த சாதனையையும் முறியடிப்பேன் என்று நினைத்ததில்லை.

பீலேவின் சாதனையை விட இது சாதாரணமானதுதான்’ என்று கூறியுள்ளார். பிரசேில் நாட்டின் சான்டோஸ் கிளப் அணிக்காக 1956 முதல் 1974வரை விளையாடிய பீலே (80) 19 சீசன்களில், 665 ஆட்டங்களில் விளையாடி 643 கோல் அடித்துள்ளார்.


Tags : Messi ,Pele Pele ,team , Messi surpassed Pele Pele for the only team
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...