×

கோயில்களில் பணியாற்றும் இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு: அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி வரும் நாதஸ்வரம், தவில், தாளம் போன்ற இசை பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இத குறித்து அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கடந்த மார்ச் 24ம் தேதி நடந்த சட்டமன்ற பேரவை கூட்ட தொடரில் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் பாடல் பெற்ற கோயில்களில் பணிபுரியும் நாதஸ்வரம், தவில் மற்றும் தாளம் போன்ற இசை கலைஞர்களுக்கு முறையே வழங்கப்படும் மாதம் ஊதிய தொகையினை மைய நிதியில் இருந்து ரூ.1,500, ரூ.1000 மற்றுமு் ரூ.750ல் இருந்து முறையே ரூ.4,500, ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.2,250 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இத்துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள நிதி வசதியற்ற கோயில்களில் பணிபுரிந்து நாதஸ்வர இசை பணியாளர் நிதியில் இருந்து மாத ஊதியம் பெற்று வரும் நாதஸ்வர பணியாளர்களின் மாத ஊதியத்தினை ரூ.1.500ல் இருந்து ரூ.4,500 ஆகவும், தவில் பணியாளர்களின் மாத ஊதியத்தினை ரூ.1000ல் இருந்து ரூ.3000 ஆகவும், தாள பணியாளர்களின் மாத ஊதியத்தினை ரூ.750ல் இருந்து ரூ.2,250 ஆகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை கடந்த நவம்பர் 7ம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோயில் நாதஸ்வர இசை பணியாளர்கள் நிதியில் இருந்து ஊதியம் பெற்று வரும் நாதஸ்வரம், தவில் மற்றும் தாளம் பணியாளர்களுக்கு நவம்பர் மாதம் முதல் இந்த உயர்த்தப்பட்ட மாத ஊதியத்தினை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : musicians ,temples ,Commissioner ,Treasury , Wage increase for musicians working in temples: Order of the Treasury Commissioner
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு