×

தொழிற்சாலையில் அம்மோனியா வாயுக்கசிவு: 2 அதிகாரிகள் பலி

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் உளள இப்கோ உரத் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதில் 2 அதிகாரிகள் பலியாயினர். 16 ஊழியர்கள் மயக்கமடைந்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அருகே புல்பூரில் இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனத்தின் (இப்கோ) தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதில் சில தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர்.  உடனடியாக மற்ற தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும், வாயுக்கசிவில் பாதிக்கப்பட்ட துணை மேலாளர், உதவி மேலாளர் இருவரும் பலியாயினர். 16 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், வாயுக்கசிவு சிறிய பகுதிக்குள் கட்டுப்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் இப்கோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அம்மோனியா வாயுவை அடைத்து வைத்திருக்கும் கலனை மூடப்படுத்தும் இரும்பு ராடு திடீரென உடைந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக விளக்கம் தரப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Ammonia gas leak ,factory , Ammonia gas leak at factory: 2 killed
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...