×

புறநகர் ரயில் நிலையங்களில் தானியங்கி நகரும் படிக்கட்டு புதிய நடைமேம்பால வசதி

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் ரயில் நிலையம் புறநகர் ரயில்களின் ஒரு மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தை நாளொன்றுக்கு சராசரியாக 90,000 பயணிகள் பயன்படுத்துகின்றனர். ஒரு புதிய  தானியங்கி நகரும் படிக்கட்டுகளை நிறுவப்படுவது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலிருந்து இறங்கி புறநகர் ரயில்களை பிடிக்கவும், கனமான பெட்டி-படுக்கைகளுடன் மேம்பாலத்தை கடக்கும் ரயில் பயணிகளுக்கு இது பெரும் உதவியாக அமையும்.

அதேபோல், மூன்று  வெவ்வேறு ரயில் வழித்தடங்களை அரக்கோணம் ரயில் நிலையம் இணைக்கிறது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 70 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும்  சராசரியாக 63,000 பயணிகள் ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். செங்கல்பட்டு மார்க்கத்தில் ரயில்களை இயக்க புதிய நடைமேடைகள் 1 ஏ, 1 பி மற்றும் 1 சி ஆகியவை புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்தப் புதிய நடைமேடைகளை இணைக்கும் விதமாக புதிய நடைமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டாவது புதிய நுழைவாயில் உருவாகியுள்ளதால் விரைவு ரயில்களில் மற்றும் செங்கல்பட்டு மார்க்கத்தில் இருந்து வரும் ரயில்களில் இறங்கும் ரயில் பயணிகள் எளிதாக ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்ல முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : walkway facility ,railway stations , New walkway facility with automatic moving stairs at suburban railway stations
× RELATED செங்குறிச்சி கிராமத்தில் புதியதாக...