விமான நிலையத்தில் அசாம் வாலிபர் மரணம்

சென்னை: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் அலி (38). இவர், வயிறு வலிக்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றார். நேற்று முன்தினம் மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று  காலை 8.30 மணி விமானத்தில் கவுகாத்தி செல்ல சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். பயணிகள் பாதுகாப்பு சோதனைக்கு வரிசையில் நின்றவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து வந்து பரிசோதனை செய்தனர். அப்போது அப்துல் அலி திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவித்தனர். 

Related Stories:

>