×

போராட்டத்தில் ஈடுபடும்போது வக்கீல்கள் கோட் அணிய தடை

மதுரை: போராட்டத்தில் ஈடுபடும் வக்கீல்கள் கழுத்து பட்டை மற்றும் கோட் அணிய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில், ‘‘வக்கீல்கள் நீதிமன்ற பணியில் ஈடுபடும்போது பார் கவுன்சில் வழிகாட்டுதல்படியான ஆடை தான் அணிய வேண்டும்.

ஆண்கள், பெண்கள் என தனித்தனி ஆடைகள் உள்ளன. சிலர் இதை முறையாக பின்பற்றுவதில்லை. டி-ஷர்ட், ஜீன்ஸ், பட்டுச்சேலை அணிந்து சிலர் நீதிமன்றத்திற்கு வருகின்றனர். பார் கவுன்சில் விதிப்படி ஆடை அணிந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது.

நீதிமன்ற பணியின்போது அனைவரும் பார் கவுன்சில் வழிகாட்டுதல்படி முறையான ஆடையை அணிய வேண்டுமென்றும், போராட்டங்களின்போது கோட் மற்றும் கழுத்து பட்டை அணியக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், போராட்டங்களின்போது வக்கீல்கள் கோட் மற்றும் கழுத்துப்பட்டை அணிய இடைக்காலத் தடை விதித்தனர்.

Tags : Lawyers ,fight , Lawyers are prohibited from wearing the coat when engaging in a fight
× RELATED நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம்