லண்டனில் இருந்து பெங்களூரு திரும்பிய மூன்று பேருக்கு கொரோனா உறுதி: உருமாற்ற கொரோனாவா? என பரிசோதனை

பெங்களூரு: லண்டனில் இருந்து பெங்களூரு வந்த மூன்று பேருக்கு தொற்று பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அது பழைய கொரோனாவா? அல்லது உருமாற்ற கொரோனாவா? என்பதை உறுதி செய்ய நிமான்ஸ் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்தாண்டு நவம்பர் மாதம் சீனா நாட்டில் வுகான் நகரி–்ல் உருவாகி, பின் உலகில் 99 சதவீத நாடுகளை நிலைகுலைய செய்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நாட்டில் இருந்து டிசம்பர் 1 முதல் 21ம் தேதி வரை 2,997 பேர் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மற்றும் மங்களூரு பஜ்பே விமான நிலையம் மூலம் வந்துள்ளனர். இதில் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த 25 பேர் பிரிட்டனில் இருந்து வந்துள்ள நிலையில் அதில் ஒருவருக்கு புதிய கொரோனா தொற்று பாசிடிவ் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அவருக்கு நடத்திய கோவிட்-19 பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதன் மூலம் பெலகாவியை நோக்கி இருந்த உருமாற்ற கொரோனா தொற்று அச்சம் நீங்கியுள்ளது.

இதனிடையில் பெலகாவி மாவட்டத்திற்கு மட்டுமில்லாமல் மண்டியா, மைசூரு, துமகூரு, ஹாசன், பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரக மாவட்டங்களுக்கும் பிரிட்டனில் இருந்து வந்துள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் முகவரியை கண்டுபிடித்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் முயற்சியை சம்மந்தப்பட்ட மாவட்ட தலைமை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இ்ந்நிலையில் கடந்த வாரம் லண்டனில் இருந்து பெங்களூரு வந்த பயணிகளில் பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் ஒரு பெண் மற்றும் பொம்மனஹள்ளி மண்டலத்தை சேர்ந்த இருவருக்கு நடத்திய சோதனையில் மூன்று பேருக்கும் ெகாரோனா தொற்று பாசிடிவ் ரிசல்ட் வந்துள்ளது. ஆனால் அவர்களை பாதித்துள்ள தொற்று பழைய கொரோனாவா ? அல்லது உருமாற்ற கொரோனாவா ? என்பதை உறுதி செய்வதற்காக எஸ்.ஜி.ஏன். பரிசோதனைக்காக ெபங்களூருவில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரிட்டனில் இருந்து 128 பயணிகள் பெங்களூரு வந்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில் அனைவருக்கும் நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். மேலும் பிரிட்டனில் இருந்து வந்துள்ள 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அமைச்சர் சுதாகர் தெரிவித்தா

Related Stories:

>