×

ஐஎஸ்எல் கால்பந்து ஜாம்ஷெட்பூர்-கோவா இன்று மோதல்: 3வது வெற்றி யாருக்கு?

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 7வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 37வது  லீக் போட்டியில் ஒடிசா-கவுகாத்தி அணிகள் மோதின.  இதில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. 2வது பாதியில் 65வதுநிமிடத்தில் கவுகாத்தியும், 67வது நிமிடத்தில் ஒடிசாவும் கோல் போட்டன.

முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.  இன்று இரவு 7.30 மணிக்கு ஜாம்ஷெட்பூர் எப்சி-எப்சி கோவா அணிகள் மோதுகின்றன.  ஜாம்ஷெட்பூர் 7 போட்டியில் 2 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் 5வதுஇடத்திலும், கோவா 7 போட்டியில் 2 வெற்றி, 2 டிரா, 3 தோல்வி என 8 புள்ளிகளடன் 7வது இடத்திலும் உள்ளன.  இரு அணிகளும் 6  போட்டிகளில்  மோதி உள்ளன. இதில் 3ல் கோவாவும், 2ல் ஜாம்ஷெட்பூர் அணியும் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.


Tags : ISL ,clash ,Jamshedpur-Goa , ISL football Jamshedpur-Goa clash today: Who will win the 3rd?
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து நாக்-அவுட் ஒடிஷா-கேரளா இன்று பலப்பரீட்சை