தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை பலி

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஒரு வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் செத்தமலை வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், கூலிதொழிலாளி. இவரது மகன் தட்சித்(1). ரமேஷ் நேற்று காலை தட்சித்தை வீட்டின் முன் படுக்க வைத்துவிட்டு, தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது தட்சித் தவழ்ந்து சென்று வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ், தட்சித்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த நாட்றம்பள்ளி போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>