மனைவியை தவிக்கவிட்டு சென்ற விமானப்படை வீரர்: 2 நாட்களாக கைக்குழந்தையுடன் காத்திருப்பு

சூலூர்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் பவுன்குமார் (27). இவருக்கு திருமணமாகி சாக்‌ஷி(23) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். 4 வருடங்களுக்கு முன் திருமணமான நிலையில் கடந்த நவம்பர் மாதம் பணிமாறுதல் ஆகி பவன்குமார் சூலூர் விமானப்படைத் தளத்திற்கு வந்துள்ளார். சூலூர் வந்ததில் இருந்து மனைவியுடன் பவன்குமார் தொடர்பு கொள்ளவில்லை எனத்தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த கர்ப்பிணியான சாக்‌ஷி நேற்று முன்தினம் சூலூர் விமானப்படைத் தளத்திற்கு வந்துள்ளார். பின்னர் தனது கணவரை சந்தித்து பேசியுள்ளார்.

அவர் ஒரு கால்டாக்சியில் மனைவி மற்றும் குழந்தையை ஏற்றிக்கொண்டு சிந்தாமணிப்புதூர் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து சாக்‌ஷி திரும்பவும் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்து நடந்தவற்றை கூறியுள்ளார். இதற்கு விமானப்படை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி நேற்று முன்தினம் முதல் விமானப்படை தளம் கேட்டின் முன்பாக கைக்குழந்தையுடன் அமர்ந்து இருக்கிறார்.விமானப்படை ஊழியர்கள் அதிகாரிகள் விசாரித்து செல்கிறார்களே தவிர எந்த உதவியும் செய்யாதது மிகவும் பரிதாபமாக உள்ளது.

Related Stories:

>