×

80 வயதானவர்கள் தபாலில் வாக்களிக்கும் விவகாரம் குறித்த வழக்கு விசாரணையை ஜனவரி 7-ம் தேதி ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதானவர்கள் தபாலில் வாக்களிக்க தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் விசாரணையை ஜனவரி 7-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்த‌து. விரிவுபடுத்தப்பட்ட தபால் வாக்கு முறை திட்டத்துக்கு எதிரான திமுக வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்கா, 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார். விருப்பப்படும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும் கூறினார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

80 வயது நிரம்பிய வாக்காளர்கள் தபாலில் வாக்களிக்கும் புதிய திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், தபால் வாக்கை வாக்குச்சாவடி அதிகாரி நேரில் சென்று பெற வேண்டும் என்பதால் இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Tags : High Court ,hearing ,voting , 80-year-olds, by post, voting, trial, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...