×

ஆமை வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.37,704க்கு விற்பனை!!

சென்னை: தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் நகை வாங்குவதில் மக்களிடையே ஒருவித குழப்பமான நிலை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி முதல் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருகிறது. 15ம் தேதி ஒரு சவரன் ரூ.37,224, 16ம் தேதி ரூ.37,504, 17ம் தேதி ரூ.37,664, 18ம் தேதி ரூ.37,760க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 19ம் தேதி தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.4,744க்கும், சவரன் ரூ.37,952க்கும் விற்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையானது. ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் காலை தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் மேலும் அதிர்ச்சிதான் காத்திருந்தது. கிராமுக்கு ரூ.34 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,778க்கும், சவரனுக்கு ரூ.272 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,224க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை சற்று குறைந்தது.

இந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை நேற்று சவரனுக்கு 176 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.4747 -க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.37,976 க்கு விற்பனையானது. தொடர்ச்சியாக 2ம் நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ.4,713க்கும் சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.37,704க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை ரூ.70.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை என தொடர்ச்சியாக வருகிறது. இந்த நேரத்தில் சவரன் ரூ.38,000த்தை நெருங்குவது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Tags : Gold, Price, Shaving, Silver
× RELATED மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை: சவரன் எவ்வளவு தெரியுமா?