×

அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தனியார் பள்ளிகள் அங்கீகாரத்தை 5 ஆண்டுக்கு நீட்டிக்க பரிசீலனை

ஈரோடு: ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல் ஆகிய  மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் நர்சரி மற்றும் பிரைமரி  பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நேற்று ஈரோட்டில்  நடந்தது. இதற்கான ஆணைகளை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தனியார் பள்ளிகளுக்கு தற்போது 3 ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.


இதை 5 ஆண்டுகளாக நீட்டிக்க தனியார் பள்ளி  நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது அரசின் பரிசீலனையில் உள்ளது. நிரந்தர அங்கீகாரம்  வழங்க வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பம். ஆனால் நீதிமன்ற தடை உள்ளது. ஜனவரி 15க்குள் 7200 ஸ்மார்ட் வகுப்புகள்  அமைக்கப்பட்டுவிடும். 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Senkottayan ,schools , Minister Senkottayan is considering extending the accreditation of private schools to 5 years
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...