×

சிபிஎஸ்இ தேர்வு எப்போது?: மத்திய கல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை: சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு எப்போது நடக்கும் என்பது குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று, ஆன்லைன் மூலம் பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து வந்த பல்வேறு கோரிக்கைகளில், கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்றும், பிப்ரவரியில் தேர்வை நடத்தக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தனர். அதனால் பிப்ரவரியில் தேர்வுகள் நடத்த வேண்டாம் என சிபிஎஸ்இ வாரியம் முடிவு ெசய்துள்ளது. இருப்பினும் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படாது, இந்த தேர்வுக்கு 30 சதவீத பாடப்பகுதிகள் குறைக்கப்படும். அத்துடன் 33 சதவீதம் அக வாய்ப்புகள் இந்த தேர்வில் இடம் பெறும். கொரோனா பாதிப்பு மாணவர்களுக்கு ஏற்பட நாங்கள் அனுமதிக்–்கமாட்டோம், மேலும், கொரோனா காலத்தில் தேர்ச்சி

பெற்றவர்களை கொரோனா பாதித்தவர்கள் என்று ஒதுக்கிவிடமாட்டோம் என்றார்.

Tags : CBSE ,Central , When is the CBSE exam ?: Information of the Union Minister of Education
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...