×

திருமங்கலம் அருகே முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியில் தொண்டரை தள்ளிவிட்ட அமைச்சர் உதயகுமார்: சமூக வலைதளங்களில் வைரல்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே, சாத்தங்குடியில் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக தொண்டரை அமைச்சர் உதயகுமார் தள்ளிவிட்ட வீடியோ காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடியில் கொரோனா விழிப்புணர்வாக பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார். இதில், அதிமுக தொண்டர்கள்  ஏராளமாக கூடினர். அப்போது குறுக்கே வந்த ஒரு அதிமுக தொண்டரை அமைச்சர் உதயகுமார் கையால் பிடித்துத் தள்ளிவிட்டு அப்புறப்படுத்தினார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Udayakumar ,masquerade ,volunteer ,Thirumangalam , Minister Udayakumar pushes out volunteer at masquerade near Thirumangalam: Viral on social media
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...