உபி.யில் பரிதாபம் கார் மீது லாரி மோதல் தீப்பிடித்து 5 பேர் பலி

ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் இருந்து லக்னோ நோக்கி யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் 5 பேர் பயணித்தனர். ஆக்ரா அருகே, கார் வளைவில் திரும்பிய போது, டீசல் ஏற்றி வந்த டாங்கர் லாரி  இவர்கள் சென்ற கார் மீது மோதியது. இதில், கார் தீப்பிடித்தது. காரில் உள்ள சென்ட்ரல் லாக் சிஸ்டத்தினால் அவர்களால் காரில் இருந்து தப்பி வெளியேற முடியவில்லை. இதனால், காரில் இருந்த 5 பேரும் உடல் கருகி பலியாகினர். விபத்து குறித்து அப்பகுதியில் பூத் நடத்தி வரும் நபர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு படையினர் வரும் முன்பாக, கார் முழுவதும் எரிந்து விட்டிருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் அவற்றை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி  வைத்தனர். தப்பியோடிய டாங்கர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>