×

பிரபல நிறுவனங்களில் விஐடி பல்கலை மாணவர்கள் 7,403 பேருக்கு வேலைவாய்ப்பு: வேந்தர் விஸ்வநாதன் தகவல்

சென்னை: உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான காக்னிசன்ட், இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்றவை ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு தேர்வுகளை நடத்தின. இதில் விஐடி வேலூர், சென்னை, அமராவதி  (ஆந்திர பிரதேசம்) மற்றும் போபால் (மத்திய பிரதேசம்) மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தேர்வு முடிவுகளை விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விஸ்வநாதன் வெளியிட்டார். அதில், காக்னிசன்ட் நிறுவனம் 1418, டிசிஎஸ் நிறுவனம் 1321 மற்றும் இன்போசிஸ் நிறுவனம் 778 என மொத்தம் 3,517 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி உள்ளனர். குறிப்பாக காக்னிசன்ட், டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனம்  ஆகியவை தேசிய அளவில் அதிகபட்சமான வேலைவாய்ப்புகளை விஐடி மாணவ, மாணவிகளுக்குதான் வழங்கியுள்ளனர். தவிர, பிரபல நிறுவனங்களான விர்டுசா, எக்ஸ்வேர், கேப் ஜெமினி மற்றும் மைண்ட் ட்ரீ நிறுவனங்களும் விஐடி மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. 382 நிறுவனங்கள் வேலைவாய்ப்பு தேர்வுகளை நடத்தி,  மொத்தம் 7,403 விஐடி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளனர்.

முன்னதாக, டிசிஎஸ் நிறுவனம் 224 பேருக்கு டிஜிட்டல் பயிற்சிக்கான வேலைவாய்ப்புகளை 7 லட்சம் ஆண்டு சம்பளத்துக்கு வழங்கியுள்ளது, இதேபோல் விப்ரோ நிறுவனம் 419 மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு சம்பளம் ₹6.5 லட்சத்தில் உயர்  பதவிக்கான வேலைவாய்ப்பை வழங்கி உள்ளது. முன்னதாக, லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை வழங்கியதற்காக விப்ரோ மற்றும் விஐடி பல்கலை இடம்பெற்றுள்ளது. கடந்த மே மாதம் முதல் விஐடியில் முதுகலை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. தற்போது வரை 144 பிரபல நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை நடத்தி 1,028  முதுகலை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளனர். இதில் 2 வருட எம்.டெக் (சாப்ட்வேர் பொறியியல்), எம்சிஏ மற்றும் எம்எஸ்சி படிப்புகளும் உள்ளடங்கியது.

தற்போதைய கொரோனா காலத்திலும் உலகின் முன்னணி நிறுவனங்களில் தேசிய அளவில் விஐடி மாணவர்கள் அதிகளவில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் 7 மாணவ, மாணவிகளுக்கு  ஆண்டுக்கு ₹44 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. விஐடி பல்கலை வளாகங்களில் வரும் மே மாதம் இறுதி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். விஐடி மாணவர்களின் திறமையை அறிந்து, ஆண்டுதோறும் மாணவ மாணவிகளுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வரும்  நிறுவனங்களுக்கு விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Tags : institutes ,VIT University , Employment for 7,403 VIT University students in reputed institutes: Vander Viswanathan Information
× RELATED தினகரன் நாளிதழ்- விஐடி பல்கலைக்கழகம்...