போலீஸ்காரரை தாக்கி வாக்கி டாக்கி பறிப்பு: கால் டாக்சி டிரைவர் கைது

சென்னை: கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் அதிவேகமாக பைக்கில் சென்ற நபர், சக வாகன ஓட்டிகளை இடித்தபடி சென்றார். பவர் ஹவுஸ் சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் பாரிவள்ளல்,  அந்த அந்த நபரை மடக்கி படித்தார். போதையில் இருந்த அவர், தலைமை காவலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தலைமை காவலரை தாக்கி, அவர் வைத்திருந்த வாக்கி டாக்கியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். இதை பார்த்த பொதுமக்கள், போதை ஆசாமியை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவலறிந்து வந்த கோடம்பாக்கம் போலீசார், போதை ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தி.நகர் சக்கரபாணி தெருவை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் முருகன் (40) என தெரியவந்தது. அவர் மீது போதையில் வாகனம் ஓட்டியது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது, பொது சொத்தை சேதப்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories:

>