×

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாஜ சார்பில் புதிய வேளாண்மை சட்ட விளக்க கூட்டம்

பொன்னேரி:  மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாஜ சார்பில் மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டம் குறித்து விரிவான விளக்க கூட்டம் மீஞ்சூர் அடுத்த மேட்டுப்பாளையம் ஆர்.எம்.ஆர். தோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மூத்த தலைவர் இல.கணேசன், தமிழ்நாடு ஏகாத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம் கலந்துகொண்டு வேளாண்மை சட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி  பேசினர். இதில் மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட பொது செயலாளர்கள் இருசப்பன், மூர்த்தி, பாலாஜி, மாவட்ட துணை தலைவர்கள் பத்மநாபன், தங்கமணி மாவட்ட செயலாளர்கள் பொன் பாஸ்கர், மகாலட்சுமி, நந்தன், மகேந்திரன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் சிவ.கோகுலகிருஷ்ணன், சமூக ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் கருக்குவேல் ராஜா, மண்டல தலைவர்கள் அன்பு, சந்திரமவுலி. சிவராஜ். பாலாஜி. நகரபொறுப்பாளர் நந்தன், விவசாய அணி மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், சீனிவாசன் மண்டல பொதுச் செயலாளர்கள் பார்த்திபன், சிவகுமார், ஒன்றிய பொருளாளர் அசோக்குமார்  கலந்துகொண்டனர்.

Tags : Minsur Southern Union ,BJP , Meeting to explain the new agricultural law on behalf of the BJP in Minsur Southern Union
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...