டெல்லியில் கடுமை பிரிவில் காற்றுத்தரம்

புதுடெல்லி: என்சிஆரில் 24 மணி நேர சராசரியாக டெல்லியில் ஏக்யூஐ, திங்களன்று காணப்பட்ட 332ல் இருந்து 418க்கு தாவியது. மணிக்கு 8 கி.மீ என காற்றின் வேகக் குறைவு, 5.3 டிகிரி செல்சியஸ் என உறைபனி நிலைக்குச் செல்லும் குறைந்தபட்ச வெப்பநிலை, ஈரப்பதம் அதிகம் போன்ற காரணங்களால் காற்றிலுள்ள மாசு கலைய வாய்ப்பின்றி நீடிப்பதால், கடுமை பிரிவுக்கு ஏக்யூஐ சென்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குநர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். வானிலையில் பெரிய மாற்றம் நிகழும் சாத்தியக்கூறு இல்லை என்பதால் ஏக்யூஐ கடுமை பிரிவில் நீடிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories:

>