×

டெல்லி விமான நிலையத்தில் 27 லட்சம் தடுப்பூசிகளை சேமிக்க முடியும்: தலைமை நிர்வாக அதிகாரி தகவல்

புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பைசர் ஆகிய மூன்று நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கான தங்களது தடுப்பூசிகளை விநியோகிக்க அவசர ஒப்புதல் கோரியுள்ளன. அவற்றை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் கோவிட்-19 நிபுணர் குழுவால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தடுப்பூசிகளை ஒப்புதல் அளிக்கப்படம்பட்சத்தில் அவற்று குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக  டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விதே குமார் ஜெய்புரியார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: ஜனவரி முதல் தொடங்கும் தடுப்பூசி விநியோக திட்டத்திற்கு ‘புராஜக்ட் சஞ்சிவனி’ என்று டயல் நிர்வாகம் பெயரிட்டுள்ளது. கோவிட்-19 தடுப்பூசிகளை பொருத்தவரை எந்த நேரத்திலும் சுமார் 27 லட்சம் தடுப்பூசி குப்பிகளை சேமித்து வைக்கும் திறன் எங்களிடம் உள்ளது. தினசரி இரண்டு சுற்று விநியோகிக்க முடிந்தால், தினமும் 54 லட்சம் குப்பிகளை வழங்கிட இயலும். பைசர் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியசில் தான் வைத்து பாதுகாக்க இயலும். ஆனால, இதற்கான வசதி டெல்லி விமான நிலையத்தில் இல்லை. இருப்பினும், நீங்கள் பைசர் இணையதளத்தில் அதன் தரவுகள் பற்றி படித்து பார்த்தால், தடுப்பூசியை 30 நாட்களுக்கு உலர் பனிக்கட்டியிலும், ஐந்து நாட்கள் எனில்2-8 டிகிரியில் வைத்து சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எனவே, அவற்றை விநியோகிக்க மொத்தம் 35 நாட்கள் கிடைக்கிறது. இதுவே போதுமானதாகும். எனவே, அதற்கு நாங்கள் முற்றிலும் எங்களை தயார்படுத்திக்கொண்டுள்ளோம். ஆனால், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் தடுப்பூசிகளை வழக்கமான குளிர்சாதன பெட்டியிலேயே வைக்க முடியும். டெல்லி விமான நிலையத்தில் குளிரூட்டப்பட்ட இரண்டு சரக்கு முனையங்கள் உள்ளன. அவை மைனஸ் -20 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை மாற்றியமைத்து வைக்க முடியும். இந்த தடுப்பூசிகள் ஒரு என்விரோடெய்னரில் தான் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவை தடுப்பூசிகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

நாங்கள் சுமார் 60 பிளக் பாயிண்டுகளை உருவாக்கி வைத்துள்ளோம். இதன்மூலம் என்விரோடெய்னரை இணைத்து அதே வெப்பநிலையில் பாதுகாத்து வைக்க முடியும். டெல்லி விமான நிலையம் உறைபனிக்கான ஏற்பாட்டையும் செய்துள்ளது. இதனால் தடுப்பூசி நீண்ட காலத்திற்கு நிலையானதாக வைத்திருக்க முடியும்.இந்த நடவடிக்கைகள் அனைத்தும் புராஜக்ட் சஞ்சிவனியின் ஒரு பகுதியாகும். இதுதவிர, தடுப்பூசிகளை எடுத்துச் செல்லக்கூடிய லாரிகளுக்கு நாங்கள் ஒரு தனி நுழைவாயிலை உருவாக்கியுள்ளோம்.அங்கு வாகனங்களை நிர்வகிக்கக்கூடிய அமைப்பு உள்ளது. எனவே, இங்கு முன்பதிவு செய்துகொள்ளவும் முடியும். இவ்வாறு தெரிவித்தார்.


Tags : CEO ,airport ,Delhi , 27 lakh vaccines can be stored at Delhi airport: CEO
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்