ஜேஎன்யூ துணைவேந்தரிடம் மாணவர் சங்கம் மனு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச்சில் ஜேஎன்யு மூடப்பட்டது. லாக்டவுன் முடிந்து நவம்பர் 2ல் ஜேஎன்யு திறக்கப்பட்டது. எனினும், கொரோனாவுக்கு ஏற்கனவே 5 ஊழியர்கள் பலியாகியும், தற்போது வளாகத்தில் 39 பேருக்கு தொற்று இருப்பதாலும், ஒட்டு மொத்த மாணவர்களையும் அனுமதித்தால், தொற்று பரவல் அதிகரித்து விபரீதம் நிகழ்வதை தவிர்க்கும் நோக்கத்துடன், பல கட்டங்களாக மாணவர்கள் அழைக்கப்படுவார்கள் என ஜேஎன்யு நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி ஆய்வு படிப்பு பிரிவில் ஒவ்வொரு துறையாக செயல்படத் தொடங்கி உள்ள நிலையில், சமூக அறிவியல் ஆய்வு படிப்பு மாணவர்களை உடனடியாக பல்கலைக்கு அழைக்க வேண்டும் என துணைவேந்தரை ஜேஎன்யுஎஸ்யு வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக, துணைவேந்தர் அலுவலகம் வெளியே ஜேஎன்யுஎஸ்யு உறுப்பினர்கள் நேற்று போராட்டம் நடத்தி தங்களது வலியுறுத்தலை எடுத்துரைத்தனர். அவர்களிடம் சமூக அறிவியல் ஆய்வு படிப்பு மாணவர்கள், எப்போது வர வேண்டும் என தீர்மானித்து அதன்படி அழைக்கப்படுவார்கள் என துணைவேந்தர் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் பல்கலைக்கு மாணவர்கள் வருகை புரிந்தாலும், ஒரு வாரம் தனிமை செய்யப்பட்டு பின்னரே சக மாணவர்களுடன் பழக அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

Related Stories:

>