×

அசாமில் 6-வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.0-ஆக பதிவு

அசாம்: அசாம் மாநிலம் நாகோன் பகுதியில் இன்று காலை 7.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 3.0-ஆக பதிவாகியுள்ளது. அசாமில் மாநிலத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தாரல் வீடுகள் லேசாக அதிர்ந்ததை உணர முடிந்ததாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். அசாம் மாநிலத்தில் இந்த மாதத்தில் மட்டும் 6-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சோனித்பூர் பகுதியில் நிலநடுக்கம் 3.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாமில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்கள் அம்மாநில மக்களை கலக்கம் அடையச் செய்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் குறித்த பாதிப்புகள் பற்றியும் எந்த தகவலும் வெளியாகவில்லை….

The post அசாமில் 6-வது முறையாக மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.0-ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : 6th ,Assam ,Assam's Nagaon ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் திறப்பையொட்டி...