மேற்குவங்க தேர்தலில் எங்களது கட்சி முழு சக்தியுடன் போட்டியிடும் : ஜார்க்கண்ட் முதல்வர் அறிவிப்பு

ராஞ்சி, :ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், மேற்கு வங்காளத்தின் தாராபித்தின் புகழ்பெற்ற புனித யாத்திரைத் தளத்திற்குச் செல்வதற்கு முன்பு தனது டும்கா இல்லத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘மேற்குவங்க தேர்தலில் எங்களது கட்சி முழு சக்தியுடன் போட்டியிடும். எதிர்வரும் தேர்தலில் எங்களது கட்சியின் வேட்பாளர்களை நிறுத்துவோம். எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டணி, மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவர்.

எங்கள் கட்சியின் அமைச்சரும், மூத்த தலைவருமான சம்பாய் சோரன், மேற்குவங்க தேர்தல் குறித்து வியூகங்களை வகுக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக வரும் நாட்களில் எங்களது குழு மேற்குவங்கம் செல்கிறது. எங்களது ஆட்சி ஓராண்டு முடிவடைந்த நிலையில், நாங்கள் பேசுவதில்லை; எங்களது வேலைகளை மக்களுக்காக செய்கிறோம்’ என்றார். 

Related Stories:

>