பிள்ளையார்குளம் காலனி தெரு: மயானத்தில் கொட்டகை அமைக்கப்படுமா?

தா.பழூர்: தா.பழூர் அடுத்த பிள்ளையார்குளம் காலனி தெரு மயானத்தில் இடுகாடு கொட்டகை அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குளம் காலனி தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ஊரின் ஓரமாக இடுகாட்டுக்கான இடம் உள்ளது. காலம்காலமாக இந்த இடத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்தும், தகனம் செய்தும் வருகின்றனர்.

ஆனால் இவர்களுக்கென அப்பகுதியில் இடுகாடு கொட்டகை இல்லாததால் தரையில் ஒரு இடத்தை தேர்வு செய்து சடங்குகள் செய்து தீமூட்டி தகனம் செய்து வருகின்றனர்.மழை காலங்களில் யாரேனும் இறக்க நேரிட்டால் அவர்களை மண்ணில் புதைத்து அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்பதை தேர்வு செய்வதே பெரிய குழம்பி விடுவோம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வாக்கு கேட்டு வரும்போது அனைத்து கட்சியினரும் உத்திரவாதம் கொடுத்து செல்கின்றனர. வெற்றி பெற்ற பின்பு சென்று கேட்டால் பார்க்கலாம் என்கின்றனர். பல்வேறு கிரமங்களில் சூரிய ஒளியுடன் மின் விளக்கு, அடிகுழாய், துக்க காரியத்துக்கு தனி கட்டிடம் என அனைத்தும் செய்து பல்வேறு இடங்களில் பயனற்று கிடக்கிறது. ஆனால் எங்களுக்கு தேவையான இடுகாடு கொட்டகை அமைத்துத்தர வேண்டி பலமுறை தெரிவித்து இதுவரை செய்து தரவில்லை. எனவே இடுகாடு கொட்டகை அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>