×

ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு

மாஸ்கோ: கொரோனாவை கட்டுப்படுத்த ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரஷ்ய தூதர் நிக்கோலே தகவல் தெரிவித்தார். ரஷ்யாவில் செச்செநோவ் நகரில் உள்ள மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர் சிட்டி ரஷ்யாவின் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் இணைந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்திருந்தது.

லத்தீன், அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போது தடுப்பூசி உற்பத்தி தான் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடமும் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்திருந்தது. இது போன்ற நோய் தடுப்பு மருந்தினை பெருமளவு தயாரிப்பதில் இந்தியா நல்ல திறன் கொண்ட நாடாகும் என ரஷ்யா ஏற்கனவே தெரிவித்திருந்தது.

Tags : Russia ,India , Russia, Sputnik V vaccine, India, Russia
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...