×

ஓசூர் அருகே அஞ்சலகிரி, சானமாவு காட்டில் திரியும் யானைகள்

ஒசூர்: ஓசூர் அருகே சானமாவு, அஞ்சலகிரி வனப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட யானைகள் மூன்று குழுக்களாக பிரிந்து முகாமிட்டுள்aளதால் கிராம மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். ஓசூர் அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று காலை அஞ்சலகிரி கிராம பகுதியையொட்டிய வனத்தில் சுற்றித்திரிந்துள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில், வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளை பட்டாசு வெடித்து விரட்டினர். இதனால், அந்த யானைகள் இரு குழுக்களாக பிரிந்து கிராமத்திற்கு அருகே உள்ள ஓடை பகுதியில் தஞ்சமடைந்தன. இந்த காட்டு யானைகளை 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

அனைத்து யானைளையும் வனப்பகுதிக்குள் விரட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல், ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10க்கும் மேற்பட்ட ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் உணவு தேடி கிராமத்தையொட்டி வலம் வருவதால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பகல் நேரங்களில் விவசாய தோட்டங்களில் பாதுகாப்பாக வேலை செய்யுமறும், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : forests ,Sanamavu ,Hosur , Wild elephants
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...