×

கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்களுக்கு வாரத்துக்கு ரூ. 22,110 நிதி... அனைத்து அமெரிக்கர்களுக்கும் தலா ரூ.44,220 : அமெரிக்க அரசு அதிரடி அறிவிப்பு!!

வாஷிங்டன் : கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு அரசு சுமார் ரூ.66 லட்சம் கோடியை நிவாரண நிதியாக ஒதுக்க முடிவு செய்துள்ளது. இந்த தொகையை வழங்குவதற்கான மசோதாவுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைகள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த தொகை கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த 2 கோடி பேருக்கு வழங்கப்படும் என்று செனட் சபையில் மூத்த உறுப்பினர் மிட்ச் மெக்கோணல் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்ட 20 லட்சம் தொழில் முனைவோருக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதன்படி கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்களுக்கு வாரத்துக்கு ரூ. 22,110 உதவியாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதுவல்லாது அனைத்து அமெரிக்கர்களுக்கும் தலா ரூ.44,220 கிடைக்கும். இதோடு கடுமையாகப் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் சலுகைகள் வழங்கப்படவிருக்கின்றன.

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் உள்ள மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதால் அமெரிக்க அரசு தானாக முன்வந்து தனது நாட்டு மக்களுக்கு இந்த மிகப்பெரிய தொகையை நிவாரணமாக வழங்க உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு அமெரிக்க மக்களுக்கு ரூ.66 லட்சம் கோடி நிவாரணமாக வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, மற்றும் ஒரு மிகப்பெரிய நிவாரணத் தொகை அமெரிக்க மக்களுக்கு ஒதுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை பள்ளிக்கு செல்ல முடியாமல் குழந்தைகள், சத்துணவு கிடைக்காத முதியவர்கள் மற்றும் வேலை இழந்த குடும்பங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என்று பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி கூறியுள்ளார்.


Tags : Corona ,Government ,Americans , Corona, work, American, American government, action, notice
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...