×

சென்ட்ரல் - ஜெய்ப்பூர் சிறப்பு ரயில்

சென்னை: சென்ட்ரல் - ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்ட்ரல் - ஜெய்ப்பூர் - சென்ட்ரல் (02968, 02967) இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் வரும் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இயக்கப்படும். அதேபோல் பண்டிகை கால சிறப்பு ரயில்சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கே.எஸ்.ஆர் பெங்களுரு - சென்ட்ரல் - கே.எஸ்.ஆர் பெங்களுரு (02608, 02607) மற்றும் (02658, 02657), லோக்மான்யா திலக் - சென்ட்ரல் - லோக்மான்யா திலக் (02163, 02164) ஆகிய பண்டிகை கால சிறப்பு  ரயில்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை இயங்கும். மேலும் தூத்துக்குடி, மைசுரு, மயிலாடுதுரை, கன்னியாகுமரி, கே.எஸ்.ஆர் பெங்களுரு உள்ளிட்ட பல்வேறு பண்டிகை கால சிறப்பு ரயில்களும் ஜனவரி 31ம் தேதி வரை இயங்கும்.


Tags : Central - Jaipur , Central - Jaipur special train
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...