100 தொகுதியில் பாஜ வென்றால் டிவிட்டரிலிருந்து விலகி விடுகிறேன்: பிரசாந்த் கிஷோர் சவால்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜ இரட்டை இலக்கத்தை தாண்டி வெற்றி பெற்றால், சமூக வலைதளத்திலிருந்து வெளியேறுகிறேன் என தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாஜ தீவிரம் காட்டி வருகின்றது. இரு தினங்களுக்கு முன் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ 200 இடங்களில் வெற்றி பெறும் என உறுதிபடக் கூறினார். இந்நிலையில், அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டரில், “ பாஜவிற்கு ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் கூறினாலும் உண்மையில் சட்டன்ற தேர்தலில் பாஜ இரட்டை இலக்கங்களை கடப்பதற்கு போராடும். தயவு செய்து இந்த டிவிட்டை சேமித்து வைத்துக்கொள்ளவும். நான் கூறியதை காட்டிலும் பாஜ சிறப்பாக வெற்றி பெற்றால் நான் இந்த சமூக வலைதளத்தை விட்டு விலகி விடுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>