வேலூரில் வரும் 28ம் தேதி காங்கிரஸ் 136ம் ஆண்டு தொடக்க விழா: கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: வேலூரில் வரும் 28ம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் 136ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூரில் வரும் 28ம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் 136ம் ஆண்டு தொடக்க விழாவும், விவசாயிகளின் ஏர்கலப்பை சங்கமும் இணைந்து நடத்தப்பட உள்ளது. விவசாயிகளின் எழுச்சி மிக்க சங்கமத்தில் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். எனவே, வேலூரில் நடைபெற உள்ள எழுச்சிமிக்க காங்கிரஸ் தொடக்க நாள் விழாவிலும், விவசாயிகள் ஏர்கலப்பை சங்கமத்திலும் பங்கேற்க வேண்டும்.

Related Stories:

>