மீண்டும் சூறைக்காற்று வீசுவதால் கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தநிலையில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மீண்டும் சூறைக்காற்றும் வீசி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பலத்த சூறைக்காற்று காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால், கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் படகுகள் இயக்கப்பட வில்லை. இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories:

>